பாளை.வரசித்தி விநாயகர் கோயிலில் நாளை மழைவேண்டி பெண்கள் கோலாட்டம்
ADDED :4854 days ago
திருநெல்வேலி : பாளை.டிரைவர் ஓ.ஏ.,காலனியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் மழைவேண்டி பெண்களின் கோலாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. பாளை.பெருமாள்புரம் டிரைவர் ஓ.ஏ.,காலனியில் வரசித்தி விநாயகர், விசாலாட்சி அம்பாள் கோயில் உள்ளது. உலக நன்மை, மழைவேண்டி நாளை (4ம் தேதி) கோலாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. காலையில் சுவாமி,
அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு விசாலாட்சி அம்பாளுக்கு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மழைவேண்டி பெண்களின் கோலாட்டம் நடக்கிறது. கோலாட்ட நிகழ்ச்சியை சரஸ்வதி குழுவினர் செய்துவருகின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் வேம்பு, ராஜாராம், செல்வராஜ் மற்றும் பலர் செய்துவருகின்றனர்.