உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ராஜகோபுரம் அமைக்க தீர்மானம்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ராஜகோபுரம் அமைக்க தீர்மானம்

திசையன்விளை : உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் 90 அடி உயரம், 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட  உள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலாகும். சென்னையில் உள்ள சுயம்புலிங்க சுவாமி பக்தசேவா சங்கத்தின் சார்பில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலுக்கு
ராஜகோபுரம் அமைக்க திட்டமிட்டு சென்னை எக்மோரில் உள்ள நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க  வளாகத்தில் சிறப்பு கூட்டம் நடந்தது. தொழிலதிபர் லங்கால் லிங்கம் தலைமை வகித்தார். திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது.  தலைவராக முருகேசன், செயலாளராக வெள்ளையாநாடார், பொருளாளராக திருச்சி சென்பகவேல்நாடார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  கூட்டத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் 90 அடி உயரமும், 7 நிலைகளும் கொண்ட ராஜகோபுரம் கட்டுவது என  தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபநாடார், வடிவேல்  முருகன், புகழ் பெருமாள், சண்முகவேல் நாடார், பெருமாள் நாடார், லிங்கபாண்டி,  சுயம்புநாதமார்த்தாண்டம், சுபாஷ், கந்தசாமி,   ராஜா, கனகலிங்கம், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !