கடையநல்லூரில் பால்குட ஊர்வலம்
ADDED :5085 days ago
கடையநல்லூர் : ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று கடையநல்லூரில் 108 பால்குட ஊர்வலம் நடந்தது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு கடையநல்லூரில் நேற்று கரியமாணிக்க பெருமாள் கோயிலில் இருந்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு 108 பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கோயில் வந்தடைந்தது. தொடர்ந்து
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீபாராதனை ஆகியன நடந்தது. பால்குட ஊர்வலத்தில் கடையநல்லூர், பண்பொழி, தென்காசி, புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.