உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா துவக்கம்

ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்குமேல் ரகு பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். பின்னர் வைத்தியநாதசுவாமி, சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகம், யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகளுடன் திருவிழா நிகழ்வுகள் துவங்கியது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா எழுந்தருளினர். விழாவில் தக்கார் முத்துராஜா, செயல் அலுவலர் ஜவஹர் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். ஏழாம் திருநாளான ஜூன் 9 அன்று இரவு 8:00 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம், 9-ம் திருநாளான ஜூன் 11 அன்று காலை 7:45 மணிக்கு தேரோட்டமும், தினமும் இரவு 7:00 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, இசைக் கச்சேரி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !