முருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா
பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலக வளாகம் வினை தீர்க்கும்வேலவர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று(ஜூன் 3) காப்புகட்டுதல் உடன் தொடங்கி ஜூன் 12 வரை நடக்கிறது.பட்டணம்காத்தான் சேதுபதிநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்உள்ள வினைதீர்க்கும் வேலவர் கோயில் பழமை வாய்ந்த கோயில் ஆகும்.
இக்கோயிலில் 58வது வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:00மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானைக்கு பழங்கள், பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால்அபிேஷகம் செய்து சர்வ அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முக்கியநிகழ்ச்சியாக ஜூன் 12 வைகாசி விசாகத்தன்று மாலையில் பூ வளர்த்து பூஜையுடன் இரவு 10:00மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதுபோல அழகன்குளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில், குயவன்குடி சுப்பிரமணியசுவாமி சுப்பையா சாது சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் காப்புக் கட்டுதலுடன் வைகாசி விசாக விழா தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் ஜூன் 12ல் பூக்குழி இறங்குதல், காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்துதல் நடைபெறுகிறது.