உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமேடு முத்தாலம்மன் கோயில் உற்ஸவ விழா

பாலமேடு முத்தாலம்மன் கோயில் உற்ஸவ விழா

பாலமேடு: பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்தாலம்மன் கோயில் உற்ஸவ நடந்தது. மே 25ல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். நேற்று முன்தினம் மேளதாளங்கள் முழங்க மறவப்பட்டி கிராமத்திற்கு சென்று அம்மனை அழைத்து வந்தனர். நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை தெற்கூர் நாயுடு உறவின்முறை சங்கம்,இளைஞர் முன்னேற்ற சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !