உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுக்கரை அகத்தியர் கோயில் வருடாபிஷேக விழா

சேதுக்கரை அகத்தியர் கோயில் வருடாபிஷேக விழா

திருப்புல்லாணி: சேதுக்கரை சின்னக்கோயில் அருகே தமிழ் மாமுனிவர் அகத்தியர் கோயில் உள்ளது. வருடாபிஷேக விழாவை முன்னிட்டு வெற்றி விநாயகர் மூலவர் அகத்தியர் ஆகியோருக்குசிறப்பு பூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் 24 நாகர் சிலை உச்சிஷ்ட கணபதி மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. யாக சாலை பூஜையில்
பூர்ணாஹுதி நடந்தது. நேற்று காலை 10;30 மணி அளவில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. ஏராளமான
பெண்கள் பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !