தென்காசியில் நாளை ராகவேந்திரர் ஆராதனை
ADDED :4855 days ago
தென்காசி : தென்காசியில் நாளை (4ம் தேதி) ராகவேந்திரர் ஆராதனை நடக்கிறது. தென்காசியில் மந்திராலய மகான் ராகவேந்திர சுவாமிகளின் 341வது ஆராதனை விழா நாளை (4ம் தேதி) நடக்கிறது. காலை 7 மணிக்கு பொருந்தி நின்ற பெருமாள் கோயிலில் அபிஷேக வழிபாடு நடக்கிறது. மதியம் 12 மணிக்கு காசிவிசுவநாதர் கோயிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் பொருந்தி நின்ற பெருமாள் கோயிலில் பஜனை நடக்கிறது. ஏற்பாடுகளை மந்திராலய மகான் ராகவேந்திரர் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.