உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

பாலாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூர் அருகே வடக்கு விசவனூர் பூர்ண புஷ்கலா, சமேத பாலாருடைய அய்யனார் கோவில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, முன்னதாக, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முதல் மூன்று மற்றும் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, விநாயகர் பூஜை, வருண பூஜை, கோமாதா பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்களால், கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை நடைபெற்றன. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !