உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துக்குழி மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முத்துக்குழி மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பேரையூர்: பேரையூர் வெள்ளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துக்குழி மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முருகன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜை, இரண்டாம் கால பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. நேற்று மாலை விளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வ. உ.சி இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !