மூல கணபதி கோவில் கும்பாபிஷேகம்
செட்டிபாளையம்: மலுமிச்சம்பட்டி சிட்கோ அருகே ராக்கி செட்டியார் தோட்டத்தில் கன்னிமூல கணபதி, ராகு, கேது தெய்வங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கலச பூஜை, முதற்கால யாக பூஜை உள்ளிட்டவையுடன் துவங்கியது.
நேற்று காலை, 7:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை. பிம்பசுத்தி, ரக் ஷாபந்தனம். சுதர்சன ஹோமம், மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, 8:00 - 9:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகத்தை சரவணகுமார், அருட்செல்வம் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். இதையடுத்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை, அன்னதானம் உள்ளிட்டவை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. இக்கோவிலில் கட்டப்பட்டுள்ள மண்டபம், திருமணம், காதுகுத்தல் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. விபரங்கட்கு. 98430 82848, 98436 82848. ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்,