உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த அய்யப்ப சாமி கோயில் கும்பாபிஷேகம். சபரிமலை தந்திரி பங்கேற்பு

ஆனந்த அய்யப்ப சாமி கோயில் கும்பாபிஷேகம். சபரிமலை தந்திரி பங்கேற்பு

அருப்புக்கோட்டை: அருப்புகோட்டை பட்டாபிராமர் கோவில் தெருவில் உள்ள, ஆனந்த ஐயப்ப சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் ஆசார்ய வரணம், கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, ரக்ச கலசம், ஹோமங்கள் நடந்தது. நேற்று காலை கலச பூஜை, அஷ்டபந்தன லேகனம், பிரசன்ன பூஜை, கலச அபிஷேகம் நடந்தது. கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை சபரிமலை பரம்பரை தந்திரி கண்டரரு ராஜீவரு தந்திரி நடத்தி வைத்தார். விழாவில் தொழிலதிபர் விஜயராம், கோவில் நிறுவனர் ராமகிருஷ்ண அய்யர் குடும்பத்தார், கோவில் குருநாதர்கள் தர்மராஜ், முருகப்பன், பாலகிருஷ்ணன், பூமிநாதன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !