வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்
வடமதுரை: வடமதுரை நாடுகண்டானூரில் பத்ர காளியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை தீர்த்த அழைப்புடன் துவங்கிய விழாவில் நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். வேடசந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பரமசிவம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், பேரூராட்சி தலைவர் நிருபாராணி, கவுன்சிலர்கள் கார்த்திகேயன், தேன்மொழி, விஜயா, சவுந்தரராஜன், மோர்பட்டி ஊராட்சி தலைவர் சிவசக்தி, ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரிபாரதி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். இதேபோல கொல்லப்பட்டி அருகே ஜி.குரும்பபட்டியில் மூல கணபதி, அய்யலூர் மணியகாரன்பட்டியில் மகாசெல்வவிநாயகர் கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது.