விடுமுறையால் நவபாஷாணதிற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பள்ளி விடுமுறை தினமான நேற்று, ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர்.
தேவிப்பட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரக அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு, தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷான கடற்கரைக்கு, வெயில் தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டு வந்த நிலையில், பள்ளிகள் நேற்று விடுமுறை தினம் என்பதால், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து, நவபாஷாண நவக்கிரகங்களை சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.