உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புறையூர் ஆலய திருவிழா

புறையூர் ஆலய திருவிழா

ஆறுமுகநேரி : குரும்பூர் அருகே உள்ள புறையூர் புனித இஞ்ஞாசியார் ஆலய பெருவிழா மற்றும் தூய அந்தோனியார் கெபியின் 25ம் ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது. 20ம் தேதி கொடியேற்றம், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடந்தது. 28ம் தேதி இரவு ஜெபமாலை, புதிய கெபி அர்ச்சரிப்பு, மாலை ஆராதனை, நற்கருணை பவனி நடந்தது. நிகழ்ச்சிக்கு மறைமாவட்ட முதன்மைகுரு ஆண்ட்ரூ டி ரோஸ் தலைமை வகித்தார். சென்னை அல்போன்ஸ் மாணிக்கம் மறையுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து புனிதரின் திருஉருவ பவனி நடந்தது. 29ம் தேதி திருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடந்தது. மணவை
வட்டார முதன்மைக் குரு செல்வராசு தலைமை வகித்தார். தூத்துக்குடி சேசு சபை தியாகு மறையுரை நிகழ்த்தினார். தொடர்ந்து  திருவுருவ பவனியும், மாலை நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !