உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெற்கு விஜயநாராயணம் தர்காவில்கந்தூரி விழா கோலாகலம்

தெற்கு விஜயநாராயணம் தர்காவில்கந்தூரி விழா கோலாகலம்

நான்குநேரி : நான்குநேரி அருகேயுள்ள தெற்கு விஜயநாராயணம் மேத்தாப்பிள்ளையப்பா தர்கா கந்தூரி விழா நேற்று நடந்தது.நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள தெற்கு விஜயநாராயணத்தில் மேத்தாப்பிள்ளையப்பா தர்கா உள்ளது. ஆண்டு தோறும் இத்தர்காவில் ஆடிமாதம் 16ம் தேதி கந்தூரி விழா நடப்பது வழக்கம். பொதுவாக முஸ்லிம்கள் கந்துரி விழாவை பிறையை கணக்கிட்டுதான் கொண்டாடுவது வழக்கம். இந்த தர்காவில் ஆடி மாதம் 16ம் தேதி கந்தூரி விழாவை நடத்துவர். அதில் எந்தநாளாகவும், எந்த பிறையாக இருந்தாலும் அன்றுதான் நடத்துவர். தெற்கு விஜயநாராயணத்தில் ஒரு முஸ்லிகள் கூட கிடையாது. தேவர் சமுதாய மக்கள் பெரும்பாலானோர் வசிக்கும் இவ்வூரில் உள்ள இந்த தர்காவில் கந்துரி விழாவை இப்பகுதியில் வசிக்கும் தேவர் சமுதாயத்தினருடன் சேர்ந்து முஸ்லிம்கள் நடத்துகின்றனர். இங்கு வரும் மக்களுக்கு இப்பகுதி  மக்களே பாதுகாப்பும் அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு கந்தூரி விழா மாலை துவங்கியது. காலை கொடி ஊர்வலமாக வந்து பள்ளிவாசலை வந்தடைந்து கொடியேற்றப்பட்ட பின் சிறப்பு துவா ஓதப்பட்டது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு கந்தூரி ஆக்கி நேர்ச்சை வழங்கப்பட்டது. விழாவில் இன்னிசை கச்சேரி மற்றும் சமய சொற்பொழிவு நடந்தது. விழாவில் நெல் லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களையும், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !