உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 108 மாவிளக்கு பூஜை

108 மாவிளக்கு பூஜை

உடன்குடி : நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை நடந்தது. நங்கைமொழி காளத்தீஸ்வரர் ஞானபிரச்சன்னம்பிகை கோயில் தென் பகுதியில் ராகு, கேது பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடந்தது. இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் 108  மாவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !