பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றதுடன் துவக்கம்
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழா இன்று (ஜூன் 6) கொடியேற்றதுடன் துவங்கியது.
பழநி மலைக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மலைக்கோயிலில் உச்சிகாலத்தில் காப்பு கட்டுதல் நடைபெற்றது. இவ்விழா ஜூன் 15, வரை நடைபெற உள்ளது.
தினமும் காலையில் தங்கப் பல்லக்கில் புறப்பாடு நடைபெறும். மாலையில் தங்க மயில், காமதேனு ஆட்டுக்கடா,வெள்ளி யானை, வெள்ளி மயில், தங்கக்குதிரை என நாள்தோறும் வாகன புறப்பாடு நடைபெறும். ஆறாம் நாள் திருவிழாவில் ஜூன் 11, ல் வள்ளி,தெய்வயானை, சமேத முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெறும். ஜூன் 12, ல் திருத்தேரோட்டம் நான்கு ரதவீதிகளிலும் நடைபெற உள்ளது. ஜூன் 15, இரவு கொடியிறக்குதலுடன் வைகாசி திருவிழா உற்சவம் நிறைவு பெறுகிறது. நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் பக்திச் சொற்பொழிவு நடைபெற உள்ளது. இதில் இணை ஆணையர் நடராஜன், கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டனர்.