பழநியில் பக்தர்கள் கூட்டம்
ADDED :1536 days ago
பழநி: பழநியில் விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
பழநியில் விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. பக்தர்கள் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வருகை புரிந்தனர். பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. வின்ச், ரோப் கார் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்குச் சென்றனர். காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அருள்ஜோதி வீதி, குளத்து ரோடு, பூங்கா ரோடு, முக்கிய வீதிகளில் வெளியூர் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தி சென்றனர்.