திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயில் பூசை திருவிழா தொடக்கம்
காரைக்கால்: காரைக்கால் திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயில் பூசை விழா இன்று (6) தேதி கோலாகலமாக தொடக்கம்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட திருமலைராயன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஆயிரங்காளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் மிக விமர்சியாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயிரம் காளியம்மன் பூசை திருவிழா நடைபெறுவது வழக்கம் இதில் அலங்கரிக்கப்பட்ட காளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இரண்டு நாள் தரிசனம் மேற்கொள்வது கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அம்பாள் மீண்டும் பெட்டியில் வைக்கப்பட்டு பிறகு 5 ஆண்டுகளுக்கு பேழைக்கு மட்டும் பூஜை நடைபெறும். விழா முன்னிட்டு இன்று (6)ம் தேதி நள்ளிரவு 1 மணிக்குப்பின் அம்பாளை பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். 7ம் தேதி மாலை ராஜசோளீஸ்வரர் கோயிலில் இருந்து பல்வேறு பழங்கள் உள்ளிட்ட பொருள்களுடன் வரிசை புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.8ம் தேதி மற்றும் 9ம் தேதி ஆகிய நாட்களில் அதிகாலை பூஜை செய்யப்பட்டு பின்னர் பக்தர்கள் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் பக்தர்கள் நலன் கருதி கழிப்பறை.குடிநீர் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்களை கண்காணிக்க பல்வேறு முக்கிய இடங்களை சி.சி.டி.வி.கேமரா மூலம் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்யும் வகையில் பல இடங்களில் கோயிலுக்குச் செல்லும் நுழைவு வாயில் முதல் கோவில் வரை இருப்புறம் பந்தல் அமைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு நலன் கருதி உள்ளூர் மற்றும் புதுச்சேரியிலிருந்து 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.