ஆயிரம் கோடி மன்மதன்
ADDED :1236 days ago
அழகை விரும்பாதவர்கள் யார்? பச்சைப் புல்வெளி கண்களுக்கு அழகாக இருக்கிறது. அருவியின் சாரல் கண்ணுக்கும், மனதுக்கும் சந்தோஷம் தருகிறது. நந்தவனத்தின் மெல்லிய பூங்காற்றும், பூத்துக் குலங்கும் வாசனை மலர்களும் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன. இப்படி இயற்கையில் உள்ள அழகு அனைத்தும் ஒன்று சேர்ந்தவன் தான் மன்மதன். இவனுக்கு ‘மாரன்’ என்ற பெயருண்டு. மன்மதனை போன்று ஆயிரம் மடங்கு பேரழகு கொண்டவன் குமாரன். முருகனின் முன்பு மன்மதனின் அழகு ஏளனப்பொருளாகி விட்டதாம். இதனால் முருகனுக்கு ‘கு’மாரன் என்ற பெயர் வந்தது. ‘கு’ என்பதற்கு ‘அதிகப்படியான’ என்பது பொருள். மாரன் (மன்மதன்) கருப்பு நிறம் கொண்டவன் என்பதால் ‘கருவேள்’ என்பர். குமாரன் (முருகன்) சிவப்பு நிறம் கொண்டவன் என்பதால் செவ்வேள் என்பர்.