அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்; 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய கட்டுக்கடங்காத அளவில் பக்தர்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மார்கழி மாத மாணிக்கவாசகர் உற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் முதல் நாளில் சுவாமி மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வார விடுமுறை, பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வழக்கமாக வரும் பக்தர்களை விட, பல மடக்கு பக்தர்கள் வருகை தருவர். அதுபோன்று இன்று ‘கிறிஸ்துமஸ்’ அரசு விடுமுறையையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்து அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. அதனால் கோவிலில், 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். பக்தர்கள் வந்த வாகனங்களால், திருவண்ணாமலை நகரில், போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது.