தைப்பூச சக்தி மாலை இருமுடி அணிவிக்கும் நிகழ்ச்சி
ADDED :12 hours ago
திண்டிவனம்: திண்டிவனத்தில் தைப்பூச சக்தி மாலை, இருமுடி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், நடந்த நிகழ்ச்சியில் நுாற்றுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தைப்பூச இருமுடி அணிந்த கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி, சுவாமிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சுகுமார், மன்ற தலைவர் முரளிதர், நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், ஆனந்த் ,கேசவன், முத்தமிழ், ஸ்ரீமதிமாலா, பானுமதி, பத்மாவதி, ராணி அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.