இல்லறத்திற்கான அரண்
ADDED :1297 days ago
அன்பு தான் இல்லறத்தில் உள்ளோரை இறுதிவரை சேர்த்துவைக்கும் உறுதியான பசையாகும். இருவருக்கும் இடையே அன்பு இருந்தால் எந்த வித சிக்கல் இருந்தாலும் சமாளிக்கலாம். இல்லறத்தில் ஏற்படும் சிறிய உரசல்களை பெரிய விரிசலாக்காமல் காப்பது அன்பு. எனவே அன்பை குலைக்கும் எதையும் பேசி விடாதீர்கள். செய்து விடாதீர்கள். அன்பு, கருணை, பொறுமை, தியாகம், விட்டுக்கொடுத்தல், தீமைகளுக்கு பதிலாக நன்மை செய்தல் இவையே இல்லறத்திற்கான அரணாகும் என்கிறார் நாயகம்.