வேணுகோபால சாமி கோயிலில் வைகாசி வசந்த விழா
ADDED :1265 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம் பட்டி வேணுகோபால சாமி கோயிலில் வைகாசி வசந்த விழா நடக்கிறது. நாலாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழா, தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும். நேற்று சாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. வீதி உலாவை ஏராளமான பக்தர்கள் கண்டு அருள் பெற்றனர். இந்த மாதம் 9 ம், தேதி மாலை 5 மணிக்கு, திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியை அருப்புக் கோட்டையைச் சுற்றியுள்ள, கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கண்டு களிப்பர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.