அழகிய மீனாள் கோயில் பூச்சொரிதல் விழா
ADDED :1265 days ago
நரிக்குடி: நரிக்குடி அழகியமீனாள் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. காப்பு கட்டி, அழகர்கோவில் மலையில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துவரப்பட்டு, நரிக்குடி முனீஸ்வரர் கோவிலில் வைத்து பூஜை செய்து, அழகிய மீனாள் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு கரகம் எடுக்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் வீதி உலா புறப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.