உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூட்டை மாரியம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

பூட்டை மாரியம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

சங்கராபுரம் :சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (4ம் தேதி) நடக்கிறது.சங்கராபுரம் அடுத்த  பூட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பு  வாய்ந்தது. உள்ளூர் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தேரோட்டத்தில்  பங்கேற்று வருகின்றனர்.இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்று (4ம் தேதி) மாலை தேர்  அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் நடக்கிறது. பாலப்பட்டு ஜாகீர் முத்துசாமி தேர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி  வைக்கிறார். எம்.பி., எம்.எல்.ஏ., கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.தேர் திருவிழா இன்று நடப்பதையொட்டி நேற்று  காலை ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு, அபிஷேகம் நடந்தது. சங்கராபுரம் மற்றும் சுற்றுப் புறக்  கிராமங்களை சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !