வாலகுருநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் : கணபதி ஹோமத்துடன் துவக்கம்
ADDED :1332 days ago
உசிலம்பட்டி: வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி, வாலகுருநாதசுவாமி கோயிலில் புதிய ராஜகோபுரம், புனரமைப்பு பணிகள் நடைபெற்று ஜூன் 10 ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று காலை 8.00 மணியளவில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.