அய்யனார் கோயில் விளக்கு பூஜை
ADDED :1395 days ago
கமுதி: கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் நிறைகுளத்து அய்யனார், மூர்த்தி விநாயகர், முத்தாலம்மன், அழகுவள்ளி, முப்பிடாரி அம்மன் கோயில் 9ம் ஆண்டு பொங்கல், முளைப்பாரி திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.கிராமத்தின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக சென்றனர். அய்யனார் உட்பட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்பு கிராமமக்கள் சார்பில் 207 விளக்குபூஜை நடந்தது.