பழநி கோயில் ஆக்கிரமிப்புக்களை விரைவில் அகற்ற முடிவு
பழநி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் விரைவில் அகற்றப்படும், என, கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கள்ள நோட்டை கண்டுபிடிக்க மலைகோயில் அலுவலகம், பஞ்சாமிர்த விற்பனை நிலையம், ரோப்கார், வின்ச், தண்டபாணி நிலையம், தலைமைநிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புதிய இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் செலவில் ஐந்து இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இவற்றை ரூபாய் எண்ணுவதற்கும் பயன்படுத்தலாம். உண்டியல் எண்ணிக்கையின் போதும் கள்ள நோட்டுக்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும். சமீப காலமாக சிலர் தெரிந்தே கள்ள நோட்டுக்களை கொடுத்து டிக்கெட்கள் வாங்குகின்றனர். இதனை கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகி விடுகிறது. மேலும் வசூலிப்பவரே கள்ள நோட்டிற்கான தொகையை செலுத்தவேண்டியதுள்ளது. ஒரு வாரத்தில் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.