உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபால்பட்டி சித்திரதாய் அம்மன் உற்சவ விழா

கோபால்பட்டி சித்திரதாய் அம்மன் உற்சவ விழா

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி ஊராட்சி வி.குரும்பபட்டி விஜயநகரிலுள்ள வெற்றி விநாயகர், சித்திரைத்தாய் அம்மன், சாத்தையாசாமி கோவில் உற்சவ விழா நடந்தது.

விழாவையொட்டி மே 30 தீர்த்தம் எடுத்து வந்து,வாணவேடிக்கையுடன் சாமி சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஜூன் 3 வெற்றி விநாயகருக்கு பொங்கல் வைத்து அபிஷேகம் நடந்தது. கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், வேம்பார்பட்டியில் இருந்து மேளதாளம், வாணவேடிக்கையுடன் சிரித்தாய் அம்மன், சாத்தையா சாமி சிலை அலங்கரித்து பக்தர்கள் ஆரவாரத்துடன் எடுத்து வரப்பட்டது. நேற்று ஜூன் 8 முளைப்பாரி எடுத்தல் ,அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், பால்குடம், தீச்சட்டி, பொங்கல் வைத்து ,கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று ஜூன் 9 திருவிழாவின் நிறைவாக அம்மன் பூஞ்சோலை செல்லுதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !