உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனீஸ்வரன் கோயிலில் தேரோட்டம் : பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருநள்ளார் சனீஸ்வரன் கோயிலில் தேரோட்டம் : பக்தர்கள் வடம் பிடித்தனர்

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று 5 தேர் திருவிழாவில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுந்தனர்.

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்ச விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் உற்சவம் நடைபெற்றது.கடந்த 2ம் தேதி அடியார்க்கு நால்வர் புஷ்ப பல்லக்கு ஊர்வலம், கடந்த 3ம் தேதி செண்பகதியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5தேர் திருவிழாவில் செண்பகத்தியாகராஜர், நிலோத்தம்பாள், வினாயகர், முருகன், சண்டியோஸ்வர் ஆகிய 5 தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.தேர் திருவிழாவை போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா,சட்டபேரவை தலைவர் செல்வம், சிவா எம்.எல்.ஏ.,ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். 5தேர்கள் தெற்கு வீதியில் புறப்பட்டு வடக்கு, மேற்குவீதி வழியாக நிலைக்கு வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தியாகராஜா தியாகராஜா கேஷங்கள் முழுங்க 5தேர்களை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுந்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான், துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ், பா.ஜ.க.,மாநில துணை தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.10ம் தேதி இன்று சனீஸ்வர பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது.நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !