உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழர் கால உமாமகேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சோழர் கால உமாமகேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே செருதியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் செருதியூர் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான அகிலாண்டேஸ்வரி சமேத உமாமகேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 7ஆம் தேதி துவங்கியது. யாகசாலையில் புனிதநீர் நிரப்பப்பட்ட கடங்கள் வைக்கப்பட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் முருகர் மகாலட்சுமி நவக்கிரகங்கள் சன்னதிகள் ஆகியவற்றில் மூலவருக்கு மகா அபிஷேகமும் மகா தீபாராதனையும் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !