மேலநத்தத்தில் நாளை வளைகாப்பு திருவிழா
ADDED :4854 days ago
திருநெல்வேலி : மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தில் உள்ள அருந்தவசு அம்மன் கோயிலில் நாளை(5ம் தேதி) காலை வளைகாப்பு வைபவம் நடக்கிறது.மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தில் அருந்தவசு அம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் நாளை(5ம் தேதி) காலை 9 மணிக்கு வளைகாப்பு திருவிழா நடக்கிறது. நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கூழ் காய்ச்சும் வைபவம் நடக்கிறது. பின் அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை மேலநத்தம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.