உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவில் திருவிழா

மாகாளியம்மன் கோவில் திருவிழா

கோவில்பாளையம்: அத்திப்பாளையம், மாகாளியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. கோவில்பாளையம் அருகே அத்திப்பாளையத்தில் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருச்சாட்டு திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. 2ம் தேதி முதல், 8ம் தேதி வரை தினமும் இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், அன்னதானம் வழங்குதலும் நடந்தது. நேற்று கரகம் எடுப்பவர்கள் அழைத்து வரப்பட்டனர். மேலும் கோவில் ஆபரணங்களை எடுத்து வருதல், சக்தி அழைத்தல் ஆகியவை நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 10:00 மணிக்கு, அலங்கார பூஜையும், மதியம் 2:00 மணிக்கு, மாவிளக்கு மற்றும் அக்னி கரகம் எடுத்தலும் நடக்கிறது. 11ம் தேதி காலை போலேரம்மா பண்டிகையும், மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவும், நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !