கமுதி அருகே விநோதமான முறையில் நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்
ADDED :1342 days ago
கமுதி: கமுதி அருகே நீராவி கிராமத்தில் ராமலிங்க செளடாம்பிகை கரக உற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.கடந்த ஜூன் 1ந் தேதி கொடியேற்றம்,காப்புகட்டுதலுடன் துவங்கியது.பின்பு தினந்தோறும் மூலவருக்கு அபிஷேகம், சிறப்புபூஜைகள் நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் தங்களின் உடலில் தன்னைத்தானே கத்தி, வாளால் கைகளில் குத்தி வினோதமான முறையில் நேர்த்திகடன் செலுத்தினர். பின்பு மாவிளக்கு எடுத்தனர்.ராமலிங்க சௌடாம்பிகை அம்மனுக்கு ஊஞ்சல் அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.விழாவில் கமுதி சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.