கங்கை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
அன்னூர்: மாணிக்கம்பாளையம், கங்கை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 13ம் தேதி நடக்கிறது.
குன்னத்தூர் ஊராட்சி, மாணிக்கம் பாளையத்தில், ராஜகணபதி, கங்கை மாரியம்மன், அரசமரத்தடி விநாயகர், கன்னிமூல கணபதி, துர்க்கை அம்மன் மற்றும் சப்த கன்னிமார் சன்னதிகள் உள்ளன. இங்கே பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 1ம் தேதி முளைப்பாரி இடும் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. வருகிற 11ம் தேதி மாலை வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது. 12ம் தேதி அதிகாலை மகா கணபதி ஹோமமும், மாலையில் யாகசாலை பிரவேசமும், முதற்கால வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. 13ம் தேதி அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 6:30 மணிக்கு விமானம் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.