உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் 11ம் ஆண்டு வருஷாபிஷேக விழா

வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் 11ம் ஆண்டு வருஷாபிஷேக விழா

மானாமதுரை: மானாமதுரை அருகே எஸ் கரிசல் குளத்திலுள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் 11ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை ஏராளமான பக்தர்கள் ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர்.இதனைத் தொடர்ந்து கோயில் முன்பாக சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகள் நடத்தி அம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், திரவியம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக,ஆராதனைகளை நடத்திசிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். விழாவில் ய எஸ்.கரிசல்குளம்,அன்னவாசல்,புதூர், ராஜாக்கள் குடியிருப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிகள் செர்டு பாண்டி,போதும்பொண்ணு ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !