உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

காளஹஸ்தி சிவன் கோயிலில் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

காளஹஸ்தி, திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளை, வேத பண்டிதர்கள் செய்தனர். தொடர்ந்து பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் மற்றும் பிற புனிதப் பொருட்களைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர், சிறப்புப் பூஜைகள் செய்து, தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா மங்கள ஆரத்தி நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !