உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித தலமான குண்டாற்றில் அசுத்தங்கள். முகம் சுழிப்பில் பக்தர்கள்

புனித தலமான குண்டாற்றில் அசுத்தங்கள். முகம் சுழிப்பில் பக்தர்கள்

திருச்சுழி: முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் குண்டாற்றில், கழிவு நீரும், அசுத்தங்களும் இருப்பதால் திதி கொடுக்க வருபவர்கள் முகம் சுளிக்கின்றனர்.

திருச்சுழியில் குண்டாறு ஓடுவதால் புனித தலமாக கருதப்படுகிறது. காசி, ராமேஸ்வரம் உட்பட, புண்ணிய ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வர். இதேபோன்று, திருச்சுழி குண்டாற்றில் தர்ப்பணம் செய்தால், காசி, ராமேஸ்வரத்தில் செய்த புண்ணியம் கிடைக்கும். இதனால், மாவட்டம் முழுவதும் அமாவாசை அன்று, மக்கள் திரளாக வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்கின்றனர். ஆனால், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் இல்லை. ஆற்றங்கரையில், தர்ப்பணம் போன்ற காரியங்கள் செய்வதற்கு மண்டபம் இல்லை. குளியல் அறைகள் இல்லை. திறந்தவெளி குளியலறையாக இருப்பதால், பெண்கள் குளிக்க தயங்குகின்றனர். ஆற்றில் வாறுகால் கழிவுகளும், குப்பைகள் கொட்டப்படுவதால், திதி கொடுக்கப்படும் பகுதி சுகாதார கேடாக உள்ளது. துர்நாற்றம் எடுக்கிறது. வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். புண்ய ஸ்தலமாக, விளங்கும் ஆற்றங்கரையை சுத்தமாக வைத்துக் கொள்வதில், ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுகிறது. குண்டாற்றில் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !