உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை சத்ய சாய் பாபா கோயிலில் கும்பாபிஷேகம் விமரிசை

சென்னை சத்ய சாய் பாபா கோயிலில் கும்பாபிஷேகம் விமரிசை

மயிலாப்பூர்: சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சத்ய சாய் பாபா கோவிலில், பாதம் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், பிரசித்தி பெற்ற சுந்தரம் ஸ்ரீ சத்ய சாய் பாபா கோவில் அமைந்துள்ளது. 41 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், நேற்று முன்தினம் மாலை, பூர்வாங்க பூஜை நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட மண்டபத்தில், நேற்று காலை பிரதிஷ்டை பூஜை நடந்தது. இதில், புட்டபர்த்தியில் இருந்து எடுத்து வரப்பட்ட, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் திவ்ய பாத பிரதிஷ்டை மற்றும் விமான கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.கும்பாபிஷேக விழாவில், ஜெய் ஸ்ரீ சாய் ராம்... என, பக்தர்கள் பக்தி முழக்கமிட்டனர்.ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட விழாவில், சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர், சத்ய சாய் குளோபல் கவுன்சில் நிர்வாகி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !