சதுரகிரி வழிபாடு: ஜூன் 12 முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
ADDED :1259 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக ஜூன் 12 முதல் 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு, பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி பிரதோஷத்தை முன்னிட்டு ஜூன் 12 காலை 7:00 மணி முதல், ஜூன் 15 காலை 11:00 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.