உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கோபுர தரிசனம்

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கோபுர தரிசனம்

கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழாவில், கோபுர தரிசன வைபவம் நடந்தது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வைகாசி பெருவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் பல்வேறு அலங்காரங்களில் சாமி வீதியுலா நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று அதிகார நந்தி கோபுர தரிசனம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு, மகாமேரு தெருவடைச்சான் நடந்தது. 13ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !