கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு விமான சுற்றுலா
சென்னை-சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து, வரும் 29ம் தேதி புறப்படும் விமான சுற்றுலாவில், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய இடங்களை காணலாம். 13 நாட்கள் சுற்றுலாவில் ஒருவருக்கு, 49 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் சென்னையில் இருந்து அடுத்த மாதம் 28ம் தேதி புறப்படும் மற்றொரு விமான சுற்றுலாவில், அமர்நாத் பனிலிங்கம், ஸ்ரீநகர் ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்கலாம். நான்கு நாட்கள் சுற்றுலாவில், ஒருவருக்கு 53 ஆயிரத்து 800 ரூபாய் கட்டணம். மேலும் விபரங்களுக்கு, 90031 40682, 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.