உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் ஆதிகும்பேஸ்வர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில்  மூலவரான கும்பேஸ்வரர், சுவாமி சுயம்புவாகவும்,  மங்களாம்பிகையம்மன்,  72 ஆயிரம் கோடி சக்திகளுக்கு அதிபதியாக  அருள்பாலிப்பதால், விஷேச நாட்கள் மட்டுமில்லாமல் தினந்தோறும் பக்தர்களின் கூட்டம் வந்து செல்லும்.

தட்சன் மகள் தாட்சாயணி எனும் பார்வதி, இப்பூவுலகத்தில் அவதரித்து சிவபெருமானை மனம்புரிய தவம் இருந்தார். அன்னையின் தவத்திற்கு இறைவன் மகிழ்ந்து காட்சியளித்து, வரமருளி, நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை நினைவூட்டும் வகையில், ஆண்டுதோறும் இக்கோவிலில் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெறுழது வழக்கம்.  இந்தாண்டு கடந்த 9ம் தேதி இரவு நிச்சயதார்த்தமும், இன்று (10-ம் தேதி) மதியம் 12 மணி முதல் 12.45 மணிக்குள், மங்களாம்பிகைய்யம்மன் சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.  இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 13-ம் தேதி வரை  திருமண சடங்கு, நலுங்கு, பெரிய பிரகார உலாவும், 14ம் தேதி காலை 10.30 மணிமுதல் 11.30 மணிக்குள், காவிரி ஆறு பகவத் படித்துறையில் தீர்த்தவாரியும், இரவு சுவாமிகள் புறப்பாடும், 15-ம் தேதி சுத்தாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !