உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

சிங்கப்பெருமாள் கோவில்: பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம், ஆயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் விமரிசையாக நடைபெற்றது.

சிங்கப்பெருமாள் கோவில் - அனுமந்தபுரம் செல்லும் சாலையில், அகோபிலவல்லி தாயார் சமேத பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.பல்லவர் கால குடைவரை கோவிலான இந்த கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.கோவிலில், இம்மாதம் 3ம் தேதி வைகாசி பிரம்மோற்சவ விழா துவங்கியது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம், விமரிசையாக நடைபெற்றது.அதிகாலையில், உற்சவர் பிரகலாதவரதர், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.காலை 7:45 மணிக்கு, தேரில் சுவாமி எழுந்தருளினார். காலை 8:15 மணிக்கு, தேரின் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து சென்றனர்.அப்போது கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா என கோஷம் எழுப்பி, பக்தி பரவசமடைந்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க, நான்கு மாடவீதிகள் வழியாக வந்த தேர், காலை 11:15 மணிக்கு, நிலையை அடைந்தது. தேரோட்டத்தில், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !