ரங்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள ரங்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடக்கிறது. விழாவையொட்டி நேற்று காலை, 7:00 மணிக்கு மங்கள இசை, திருவிளக்கு ஏற்றுதல், மகா சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தீபாராதனை ஆகியன நடந்தன. நேற்று மாலை, 4:00 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், அதைத்தொடர்ந்து வாஸ்து ஹோம பூஜை, காப்பு கட்டுதல், புனித மண் எடுத்தல், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியன நடந்தன. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு கண் திறத்தல், பெயர் சூட்டல், தீபாராதனை சாற்றுமுறை ஆகியன நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு யாகசாலையில் இருந்து பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அலங்காரம், தச தரிசனம், மகாதீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.