மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1257 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோவிலேந்தல் முத்துமாரியம்மன் கோவில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, முன்னதாக விநாயகர், விக்னேஸ்வரர் பூஜைகள், நடைபெற்றன. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.