உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாக திருவிழா மதுரை - பழநிக்கு சிறப்பு ரயில்

வைகாசி விசாக திருவிழா மதுரை - பழநிக்கு சிறப்பு ரயில்

மதுரை : வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஜூன் 12ல் மதுரையில் இருந்து பழநிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

முன்பதிவில்லாத இந்த சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 10:50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:25 மணிக்கு பழநி சென்று சேரும். மறுமார்க்கத்தில் பழநி --- மதுரை முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் பழநியில் இருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு மாலை 5:10 மணிக்கு மதுரை வந்து சேரும்.இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக் கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !