உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரிவாள் மீது ஏறி அருள்வாக்கு

அரிவாள் மீது ஏறி அருள்வாக்கு

வேடசந்துார்: வேடசந்துார் அடைக்கனுார் மாரியம்மன், காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி நேற்று மதியம் கோயில் பூசாரி அம்மையப்பன் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். அப்போது அம்மன் அருள் வந்த அவர் அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து ஆணிகள் அடிக்கப்பட்ட செருப்பை அணிந்தும், நாற்காலியில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகள் மீது அமர்ந்து அருள்வாக்கு கூறினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !